Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு பிணை வழங்கக் கோரி கடந்த சில நாட்களுக்கு முன் அவர், சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனையடுத்து, அவர் ஏற்கனவே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, விமல் வீரவங்க மேலதிக சிகிச்சைகளுக்காக இன்று புதன்கிழமை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 Responses to சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து விமல் வீரவங்ச தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...