Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட இலங்கை பணியாளர்களைக் கொண்ட கப்பலை விமானத்தின் மூலம் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கூட்டு சமுத்திர செயலணி தலைமையகத்தினால் (Combined Maritime Force Headquarters) நிர்வகிக்கப்படும் கூட்டு அதிரடிப்படையினரிடம் 151 (Combined Task Force – 151) இது தொடர்பாக கடற்படை இந்த பிரிவினரிடம் கேட்போதே இந்த விடயத்தை தெரிவித்திருப்பதாக இலங்கைக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் நிரந்தர கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் இந்த படைப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக் கடற்படை இன்று காலை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ARIS-13 வர்த்தக கப்பல் (Bunkering Tanker ) எரிபொருளை எடுத்துச்செல்லுதல் என்ற இந்த கப்பல் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ம் திகதி Djibouti இருந்து புறப்பட்டு சோமாலியாவின் Mogadishu நோக்கி சென்றுகொண்டிருந்த போது இம்மாதம் 13ம் திகதி GMT நேரப்படி 11.58க்கு (UTC)மணியளவில் ஆயுதம்தாங்கிய இரு வள்ளங்கள் வேகமாக இந்த கப்பலை நோக்கி வந்ததாக பிரான்ஸ் சமுத்திர மீட்பு இணைப்பு மத்திய நிலையம் MRCC – France என்ற பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதாக இலங்கை சமுத்திர மீட்பு மத்திய (MRCC – Colombo)நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக்கப்பல் சர்வதேச கப்பல் பதிவுநிறுவனத்தினால் Lloyds Registry நிறுவனத்தில் இலங்கை கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் சமுத்திர மீட்டு இணைப்பு மத்திய நிலையம் (MRCC – France ) இந்த சந்தர்ப்பத்திலிருந்து கப்பலுடன் தகவல்களை பரிமாறல் தடைப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விடயங்களை கண்டறியும் போது இந்த கப்பல் தற்பொழுது சோமாலியா கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருப்பதாக தெரிகின்றது.

மேலும், இந்த கப்பல் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி வரையில் இலங்கை கொடியின் கீழ் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்ததுடன் 2017 ஜனவரிமாதம் 28 ம் திகதி கொழும்பிலிருந்து Djibouti நோக்கி பயணித்துள்ளதுடன் அன்றையதினம் கப்பலில் இருந்த கொமரூஸ் (Comoros) கொடி மாற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாகவும் பாஹரேனிலுள்ள கூட்டு சமுத்திர செயலணி தலைமையகத்தினால் (Combined Maritime Force Headquarters) நிர்வகிக்கப்படும் கூட்டு அதிரடிப்படையினரிடம் 151 (Combined Task Force – 151) தகவல் கிடைத்தது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பல் நிரந்தர கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியிருப்பதை உறுதிசெய்வதற்காக PC3 என்ற விமானத்தின் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பலில் பணியாளர்கள் 8 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் . இந்தபட்டியலுடன் கப்பலின் கொடி கொமரூஸ் தேசியக்கொடிக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் இலங்கை தேசியக்கொடியுடன் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக int.wnwd.com இணையத்தளத்தின் மூலம் பெறப்பட்ட தகவல் கொழும்பு -Djibou – Mogadishu வரையில் கப்பல் பயணித்த பாதை மற்றும் கப்பல் தற்பொழுது நங்கூரமிடப்பட்டுள்ள வரைபடமும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

0 Responses to சோமாலியக் கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலை மீட்க முயற்சி; இலங்கைக் கடற்படை தகவல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.