கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகளிடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையில் அல் ஹூசைன், மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இதனை வலியுறுத்திக் கூறியுள்ளதை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் Baroness Joyce Anelay சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இன்னும் பல்வேறு கருமங்கள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாக கூறியுள்ள பிரித்தானிய அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.நா.விடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா