Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை மூட போலீசார் வற்புறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக பரவும் செய்தியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கெடுபிடியால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடைக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 16 நாடுகளாக தொடர் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்ய சென்ற போது கடலின் உட்பகுதிக்கு மாணவர்கள் சென்றதால் சற்று பதற்றம் நிலவியது. கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்கவில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டு .போராட்டம் நடத்திய மாணவர்களை போலிசார் கைது செய்தனர். இப்பட்டிப்பட்ட சூழல் மெரீனாவில் நிலவுவதால், அங்கு கடைகளை திறக்க கூடாது என்று போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தடை வித்து உள்ளனர் என்புதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சென்னை மெரினாவில் கடைகளை திறக்க போலீஸ் தடை!

Post a Comment

Followers