சேவையிருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர்களினாலும், புனர்வாழ்வு பெறாத முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளினாலும் நாட்டுக்குள் அச்சுறுத்தல் நிலை நீடிப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதாள உலகக் கோஷ்டியை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்துக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் மற்றும் பொலிஸைக் கட்டுப்படுத்த, ஒருவருக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “களுத்துறை சிறைச்சாலைத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில், எவர் மீதும் நாம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்போவதில்லை. எமது குறைபாடு காரணமாகவே இந்தத் தவறு நடந்தது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். எமது குறைகளை நாம் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
அத்தோடு, பாதாள உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகளுக்கு இனி ஒருபோதும் இடமில்லை. அதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைக் கடுமையான கடமைகளில் ஈடுபடுத்துவேன். எவ்வாறாயினும், கடந்த வருடம் இடம்பெற்ற குற்றச்செயல்களின் எண்ணிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, இவ்வருடக் குற்றச்செயல்களின் எண்ணிக்கைக் குறைவாகும். இருப்பினும், இடம்பெற்றுள்ள குற்றச்செயல்களை நோக்கும் போது, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென்றே காட்டுகிறது.”என்றுள்ளார்.

0 Responses to தப்பிச் சென்ற இராணுவத்தினராலும், புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகளினாலும் அச்சுறுத்தல்: பொலிஸ் மா அதிபர்