போரின் போது குற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்குமாறு கோருகிறோம். மாறாக, ஒட்டுமொத்த இராணுவத்தினையும் தண்டிக்குமாறு கோரவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தார். இதன்போது, அவர், வடக்கு மாகாண முதலமைச்சரவையும் சந்தித்துப் பேசினார். இதன்பின்னர், ஊடகவியலாளர்களிடம் முதலமைச்சர் கருத்து வெளியிட்டார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கடந்த சனிக்கிழமை, “நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரை தண்டிக்க அனுமதிக்கப்படாது“ என்று கருத்து வெளியிட்டிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களினால் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “சந்திரிக்கா அமையார் கூறியது புதிய விடயமல்ல. இப்படியான கருத்தையே மஹிந்த ராஜபக்ஷவும் கூறியிருந்தார். நாம் ஒட்டுமொத்த இராணுவத்தையும் தண்டிக்குமாறு கோரவில்லை. மாறாக, போரின் போது குற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்குமாறு கோருகின்றோம். இதனையே, சர்வதேசமும் கோருகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to குற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்கக் கோருகிறோம்: சி.வி.விக்னேஸ்வரன்