திட்டமிட்ட வகையில் சமூக மற்றும் அரசியல் ஓரங்கட்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான அவசர வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கை அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் தொடர்பில் ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரின் நேற்றைய (புதன்கிழமை) அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு - கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணாமல் போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம் என்பன தொடர்பில் இலங்கை அரசு ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி ஏற்படாத வகையில் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ரீட்டா ஐசாக் நாடியா மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களில் இலங்கை அக்கறை கொள்ள வேண்டும்: ஐ.நா. நிபுணர்