Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலத்தில் மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உண்மை அறியும் ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் இரண்டு மாதங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர், தவறிழைத்த அனைவருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வின் இரண்டாவது நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மங்கள சமரவீர இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை அரசாங்கம் சகல இனத்தவர்களுடனும், ஒத்துழைப்புடன் பணியாற்றி நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்கின்றது. மனித உரிமைகள், நல்லாட்சி, சட்டவாட்சி, நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றை இதன் மூலம் ஏற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை தெரிவு செய்ய அதிகளவிலான வடக்கு. கிழக்கு மாகாண மக்கள் வாக்குகளை பயன்படுத்தியுள்ளமை நல்லிணக்கத்திற்குரிய சிறந்த சான்றாகும். அரசாங்கத்தின் வெளிப்படை தன்மையினால் சர்வதேச தடைகளில் இருந்து இலங்கை விடுவிக்கப்பட்டுள்ளது. ” என்றுள்ளார்.

0 Responses to தவறிழைத்த அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை; ஐ.நா. அமர்வில் மங்கள சமரவீர தெரிவிப்பு!

Post a Comment

Followers