எந்தவொரு காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தான் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்காக தான் தொடர்ச்சியாக முன் நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைவாக வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆலோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்துடன், தான் ஒருபோதும் வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கு தயாராக இல்லையென அவருக்கு 24 மணித்தியாலங்களுக்குள் பதிலளித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்குள் அனுமதியேன்: ஜனாதிபதி