முன்னாள் இராணுவத் தளபதி கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.
இறுதி மோதல்களின் தாக்குதல் தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட கமல் குணரட்ன, தன்னுடைய இராணுவ வாழ்வினை கையமாக வைத்து ‘நந்திக்கடல் வழியாக’ எனும் நூலை எழுதியிருந்தார். அதில், இறுதி மோதல் சம்பவங்கள் பற்றியும் அவர் எழுதியிருந்தார்.
இந்தநிலையில் குறித்த நூல் பற்றி கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், “தமிழ் கடும்போக்காளர்கள் இராணுவத்தினர் பற்றி கூறிய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் விடயங்களே கமல் குணரட்னவின் நூலில் காணப்படுகின்றது. அண்மைய வரலாற்றில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் மிகவும் மோசமான ஆவணமே இந்த நூலாகும்.
இராணுவத்தினர் குற்றம் இழைக்கவில்லை என நாம் உலகம் முழுவதிலும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றோம். ஆனால், இந்த நூலில் இராணுவத்தினர் குற்றம் இழைத்துள்ளதாக ஒப்புக் கொள்ளும் தகவல்கள் உள்ளடங்கியிருக்கின்றன.” என்றுள்ளார்.

0 Responses to முன்னாள் இராணுவத் தளபதி கமல் குணரட்ன இராணுவத்தை காட்டிக் கொடுத்துள்ளார்: மங்கள சமரவீர