ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசின்
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை மேலும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
சிகிச்சை பற்றி குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டு சம்மதம் பெறப்பட்டதாக
கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் யார் அந்த குடும்பத்தார்? என்று அரசு
விளக்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு ரத்த சொந்தம் நானும் தீபக்கும்தான். என்னிடம் எந்த
தகவலும் தெரிவிக்கவில்லை. என்னை உள்ளேயே விடாமல் தடுத்துவிட்டனர்.
டிசம்பர் 5-ந் தேதி உயிர்காக்கும் உபகரணங்கள் நீக்கப்பட்டது ஏன்? யாரிடம்
சம்மதம் பெறப்பட்டது? ஆவணங்களில் யார் கையெழுத்திட்டது?
மருத்துவ நெறிமுறைகளின் அடிப்படையில் என்னிடமும், தீபக்கிடமும் ஒப்புதல்
பெறப்பட்டிருக்க வேண்டும். என்னிடம் எந்த ஒப்புதலும் பெறவில்லை.
தீபக்கிடம் இருந்து சம்மதம் பெறப்பட்டிருந்தால் அந்த ஆவணங்களை அரசு
வெளியிட வேண்டும். அரசு அறிக்கையில் குடும்பத்தார் யார் என்று ஓரிடத்தில்
கூட பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தீபா கூறியுள்ளார்.

0 Responses to குடும்பத்தார் யார்?: தீபா