Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூச்சுத்திணறல் காரணமாக மயக்க நிலையில் ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலம்
அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் அனுமதிக்கப்பட்டார் என்று
எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலிதாவிற்கு 5 முறை சென்னை வந்து
சிகிச்சை அளித்தனர். அது தொடர்பான அறிக்கையை இன்று டெல்லியில்
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் அளித்தனர். அந்த அறிக்கையை
ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அந்த அறிக்கையில் போயஸ்கார்டனில் இருந்து
ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தது முதல் அவருக்கு
இருந்த நோய் தாக்கம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு நீர்ச்சத்து குறைபாடு, நீரிழிவு நோய் தாக்கம் இருந்ததாகவும்
கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு தவறான மருந்துகள் தரப்பட்டதாக
கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓபிஎஸ் அணியின் கோரிக்கை டைம் பாம் ரகம் என
உளவுத்துறை வார்னிங் கொடுத்ததால்தான் அவசரம் அவசரமாக அறிக்கை ஒன்றை
தயாரிப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மயக்க நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்:எய்ம்ஸ் அறிக்கை

Post a Comment

Followers