இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை முன்னெடுக்கப்படவில்லை. அப்பொறிமுறை தோல்வியடைந்து விட்டது. ஆகவே, சர்வதேசப் பொறிமுறை அவசியம் என்று மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவில் யஸ்மின் சூகாவும் ஒருவர். அவர், தொடர்ந்தும் இலங்கை விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
நிலைமாறு கால நீதி தொடர்பில் இலங்கை அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது, அதிர்ச்சிகரமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. ஆகவே, சர்வதேசப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையில் உள்ளகப் பொறிமுறை தோல்வி; சர்வதேசப் பொறிமுறையே அவசியம்: யஸ்மின் சூகா