சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., சார்பில், மாநில
தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில்,
குறுகிய காலத்திற்குள், மூன்றாவது முறை தேர்தல் நடக்கிறது. இம்முறை,
அ.தி.மு.க., மூன்று பிரிவுகளாக சிதறியுள்ளது. மேலும், இரட்டை இலை
யாருக்கு என்பது, இன்னும் முடிவாகவில்லை. அதனால், சுயேச்சை சின்னங்களில்,
அவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அத்துடன், ஓட்டு வித்தியாசமும்
குறையும். அது, பா.ஜ.,விற்கு சாதகமாக இருக்கும். இதுதவிர, அங்கு கணிசமான
அளவில் நாடார் சமுதாய மக்கள் வசிப்பதால், தமிழிசை போட்டியிவார் என,
தெரிகிறது.
இருப்பினும், கடந்த முறை போட்டியிட்ட எம்.என்.ராஜா, ராயபுரம் தொகுதியில்
போட்டியிட்ட ஜமீலா ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படலாம். ஓரிரு
நாளில், கட்சி உயர்மட்ட குழு கூடி, இதுபற்றி அறிவிக்கும். இவ்வாறு அந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Responses to ஆர்.கே.நகரில் தமிழிசை போட்டி?