Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தோ அமெரிக்க சீக்கியப் பெண்ணான ராஜ்ப்ரீட் ஹெயிர் என்பவர் மீது வெள்ளையின மனிதர் ஒருவர் பொது இடத்தில் இனக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது ராஜ்ப்ரீட் ஹெயிர் நியூயோர்க்கின் மான்ஹாட்டனில் சப்வே ரயிலில் ஏறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தருணத்தில் அவரை நோக்கி வந்த வெள்ளையின் மனிதர் ஒருவர் 'நீ இந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல! மரியாதையாக லெபனானுக்கே திரும்பிச் சென்று விடு!' என்று கத்தியுள்ளார். ஆனால் உண்மையில் ஹெயிர் இந்தியானாவில் உள்ள நேம்சேக் நகரான லெபனான் என்ற இடத்துக்கு அண்மையில் பிறந்தவரே தவிர மத்திய கிழக்கு நாடான லெபனானுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ஆகும். அமெரிக்காவில் அண்மைக் காலமாக இது போன்ற பல இனக் காழ்ப்புணர்வு சம்பவங்கள் மட்டுமன்றி வன்முறையும் அதுவும் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கன்சாஸ் நகரில் 32 வயதான இந்திய பொறியியலாளர் சிறீனிவாஸ் குச்சிபோட்லா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் 51 வயதான அமெரிக்க நேவி வெட்டரனான அதாம் புரிண்டொன் என்பவரால் சுட்டுக் கொல்லப் பட்டதுடன் அதற்கு முன்னதாக எனது நாட்டை விட்டு வெளியேறு என்று சத்தமிட்டதாகவும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் 39 வயதான சீக்கிய மனிதர் ஒருவர் வாஷிங்டன் மாநிலத்தில் தனது காரை பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு மர்ம அமெரிக்க நபர் அவரை சுட்டுக் கொன்றதாகவும் அதற்கு முன்பாக் உனது சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல் என்று சத்தமிட்டதாகவும் அமெரிக்காவின் சியாட்டில் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவில் சீக்கிய அமெரிக்கப் பெண் மீது இனக் காழ்ப்புணர்ச்சி

Post a Comment

Followers