Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு மாறாக செயற்பட்டதினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு ஒரு வார காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் குணவர்த்தனவை பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து ஒரு வார காலம் நீக்கும் தீர்மானத்தினை அவைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று புதன்கிழமை முன்வைத்தார்.

குறித்த தீர்மானத்தினை வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானம் 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்ய மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சபையில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்ற விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார்.

இதனால் தினேஷ் குணவர்த்தனவை சபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டதோடு, சவையை 10 நிமிடத்திற்கு ஒத்திவைத்தார். சபை நடவடிக்கைகள் 3 முறை ஒத்திவைக்கப்பட்டதோடு, தினேஷ் குணவர்த்தனவை சபையிலிருந்து வெளியேற்றுமாறு பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, அவசியம் ஏற்படுமிடத்தில், பொலிஸாரின் உதவியைப் பெறுமாறும் சபாநாயகர் அறிவித்தார். எனினும், தினேஷ் குணவர்த்தன வெளியேற மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்தே, குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 Responses to தினேஷ் குணவர்த்தன பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு ஒரு வாரத் தடை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...