Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், இலங்கையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ அணியினர் (கூட்டு எதிரணி) போல தீவிரப் போக்குடையவர்களே என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் விசனம் வெளியிட்டுள்ளார்.

உதவி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்கிவைப்பதற்காக இலங்கைக்கு வரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை, தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில், “தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் உண்மையான தன்மை, மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் மக்களுக்காக உதவுவதற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைக் கூட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

நாமல் ராஜபக்ஷவின் குறித்த கருத்துக்கு ஆங்கிலத்தில் பதிலளித்துள்ள மனோ கணேசன், “ஆம், பிரிக்கப்படா இலங்கைக்குள், அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமாகத் தேசிய பிரச்சினையைத் தீர்க்க முயல்வதைக் குழப்பும் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) அரசியல்வாதிகளின் உண்மையான தன்மைக்கான, தீவிரப் போக்குடைய எதிராளிகளே” என்று தெரிவித்திருந்தார்.

பின்னர் தமிழில் பதிலளித்த மனோ கணேசன், “நாமல், அவர்கள் உம் தமிழக மச்சான்ஸ். இங்கே அதிகாரப் பகிர்வு மூலம் இனப்பிரச்சினைத் தீர்வை தடுக்கும் உம்மைபோல” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வேறொரு டுவிட்டர் கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “இன்று, ஈழவாதிகளை விட தெற்கின் பேரினவாதிகள்தான், தமிழீழம், பிரிவினை, மீண்டும் யுத்தம் ஆகியவற்றுக்கான சூழல்களை வேகமாக உருவாக்குகிறார்கள். துவேசம் மூலம் அதிகாரப் பகிர்வு, மொழி சமத்துவம் ஆகியனவற்றை எதிர்த்து அரச/அரசற்ற பயங்கரவாதங்களை முன்னெடுக்கிறார்கள், வணக்கத்துக்குரிய பேரினவாதிகள்”என்றும் அவர் எழுதியுள்ளார்.

0 Responses to தமிழக அரசியல்வாதிகளும் மஹிந்த அணி போன்று தீவிரப் போக்குடையவர்களே; மனோ கணேசன் விசனம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...