Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதும் ஒரு வகையில் புரட்சியே என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைவரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை ஊடாக நாட்டை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்கு மக்களின் ஆதரவு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற 1917ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் 100 வருட நிறைவாண்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு பற்றி சிந்தித்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல்வாதிகளே இன்று நாட்டுக்கு தேவைப்படுகின்றனர். இலங்கையில் கடந்த காலங்களில் இரண்டு புரட்சிகள் இடம்பெற்றன. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தமையும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து அரசாங்கம் அமைத்தமையும் அந்த இரண்டு புரட்சிகளாகும்.” என்றுள்ளார்.

0 Responses to பேச்சுக்களினூடு பிரச்சினைகளைத் தீர்ப்பதும் புரட்சியே: ரணில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.