Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரிலுள்ள ஒரு கஃபேயில் மர்ம நபர்கள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு அல்பேனியர்கள் கொல்லப் பட்டதாகவும் ஜேர்மனியின் மேற்கு நகரமான டுஸ்ஸெல்டோர்ஃபில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ஒரு நபர் கத்தியால் தாக்கியதில் 9 பேர் காயமடைந்ததாகவும் இன்று வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த இரு தாக்குதல்களுக்கும் பின்னணியில் தீவிரவாதம் இல்லை எனப் போலிசார் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் பாசெல் நகர கஃபே 56 விடுதியில் கருப்பு உடை அணிந்த இரு மர்ம நபர்கள் வியாழன் இரவு 8:15 அளவில் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 அல்பேனிய இளைஞர்கள் கொல்லப் பட்டும் ஒரு அல்பேனியர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னால் போதைப் பொருள் விவகாரம் உள்ளதாகவும் குறித்த கஃபேயின் உரிமையாளர் இவ்விவகாரத்தால் பல வருடங்களுக்கு முன் மாற்றப் பட்டவர் என்றும் தெரிய வருகின்றது.

உலகில் மிக அதிகமான அளவு மக்கள் தமது வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று என்றாலும் அந்நாட்டில் துப்பாக்கி வன்முறை மிக மிகக் குறைவாகும். சுவிஸில் இராணுவப் பயிற்சி பெற்றவர்கள் துப்பாக்கியை வீட்டில் பயிற்சி காலத்துக்குப் பிறகும் வைத்திருக்க அனுமதிக்கப் படுகின்றார்கள் என்பதுடன் சிலசமயம் இச்சட்டம் அங்கு தனிப்பட்ட விரோதத்தின் போது ஆயுதப் பிரயோகத்துக்கு வழி வகுத்து விடுகின்றது என்றும் கூறப்படுகின்றது. சுவிஸ் பத்திரிகைகளின் தகவல் படி 8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் குறைந்தது 2 மில்லியன் பேர் வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கணிப்பிடப் பட்டுள்ளது.

0 Responses to சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனியில் வன்முறை : சுவிஸ் கஃபே துப்பாக்கிச் சூட்டில் இரு அல்பேனியர்கள் பலி

Post a Comment

Followers