Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும். அதில், எந்தவித மாற்றமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் படி, மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். அதன்பிரகாரம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஐன வாக்கெடுப்பை நடத்துவது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும். சிலர் அதனை எதிர்ப்பது எந்தவிதத்திலும் பிரச்சினையாக அமையாது. அரசாங்கம் இதில் வெற்றிபெறும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்படும். அன்று இல்லாதவர்கள் இன்று அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினாலும் அதில் எந்தவித நெருக்கடியும் இல்லை.” என்றுள்ளார்.

0 Responses to மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...