Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு நகருக்குள் ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களால் நகரின் இயல்புநிலை பாதிக்கப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை இவ்வாறான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை வாரத்தில் ஒரு நாளில் மட்டும் நடத்தக்கூடியதான செயல் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களால் தலைநகரினதும், மக்களதும் இயல்புநிலை பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

கடந்த பல மாதங்களில் தினசரி ஏதாவது பிரச்சினையை முன்வைத்து நாட்டின் பொருளாதார கேந்திர நிலையமான கொழும்பு மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி வருகின்றன.

இதன் மூலம் அரச பணிகளை சீர்குலைத்து ஆட்சியை கவிழ்ப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து அரசின் நல்லாட்சிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட சிலர் முயற்சிப்பதாகவும் ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்பு உயர் மட்டங்களுடன் உடனடியாக கலந்துரையாட தீர்மானித்துள்ளார்.

0 Responses to கொழும்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Post a Comment

Followers