Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் வகையிலான சுற்று நிருபமொன்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களுக்கான தடை தொடர்பில் சுற்று நிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன்னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்விக்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தடையாக அமைந்திருப்பதாக பெற்றோர் கல்வி அமைச்சிற்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்த முறைப்பாடுகளையும் ஏனைய பல விடயங்களையும் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சு மேற்கண்ட முடிவினை எடுத்துள்ளது.” என்றுள்ளது.

0 Responses to பள்ளி மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவதற்கு தடை; கல்வி அமைச்சு நடவடிக்கை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.