Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கலப்புப் பொறிமுறையை முன்னெடுப்பதாக அரசாங்கம் எந்தவித வாக்குறுதிகளையும் ஐக்கிய நாடுகளுக்கு வழங்கவில்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்தவித வாக்குறுதிகளையும் ஐக்கிய நாடுகளிடம் வழங்கவில்லை. சிலர் அரசியல் இலாபங்களுக்காக பொய்ப் பரப்புகளை மேற்கொள்கின்றனர். எமது அரசியலமைப்பில் கலப்பு பொறிமுறைக்கு இடமில்லை.” என்றுள்ளார்.

0 Responses to கலப்புப் பொறிமுறை தொடர்பில் அரசாங்கம் ஐ.நா.வுக்கு வாக்குறுதி வழங்கவில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

Post a Comment

Followers