Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ
கூறியதாவது:தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், படகுகளை கைப்பற்றவும்
இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே சுப்பிரணிமணியன் சுவாமிதான் என்பதை
அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 140 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு
800க்கும் அதிகமான மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.தற்போது மீனவர் இலங்கை
கடற்படையினரால் படுகொலை செய்ததை தொடர்ந்து இரண்டு நாட்களாக மீனவர்கள் பல
போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை
முடக்கிய குற்றத்திற்காகவும், தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும்
சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என்றார்.

0 Responses to இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே சுப்பிரணிமணியன் சுவாமிதான்: மீனவ பிரநிதி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...