இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கலப்பு விசாரணைப் பொறிமுறை அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட 30/1 தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் ஏராளம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் தொடர்பிலான அறிக்கையை 18 மாதங்களின் நிறைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜெனீவாவில் இடம்பெற்று வரும் 34வது மனித உரிமைகள் கூட்டத்தொடரின் நேற்றைய (புதன்கிழமை) அமர்வில் குறித்த அறிக்கையை அவர் சமர்ப்பித்தார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கலப்பு விசாரணைப் பொறிமுறையின் கீழ் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளடங்கிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இற்காக இலங்கை சர்வதேசத்தினதும் ஐக்கிய நாடுகளினதும் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சையிட் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.
“பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த போதிலும், 18 மாதங்கள் கடந்த போதிலும் அச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. அதுபோல, காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். அத்தோடு, அரச பாதுகாப்பு படையினர் தண்டனைகளிலிருந்து தப்பிக்கொள்ளும் கலாசாரம் தொடர்கின்றது. அது, முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to கலப்பு விசாரணைப் பொறிமுறை அவசியம்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் வலியுறுத்தல்!