Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை முன்னெப்பது அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை முன்னெடுப்பது சாத்தியமற்றது. ஆகவே, மாற்று வழிகளைத் தேட வேண்டியது அவசியம். கலப்பு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பில் சட்ட இயற்ற வேண்டுமானால், பொது வாக்கெடுப்பு நடத்துவதும் அவசியமானது என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to கலப்பு நீதிமன்றப் பொறிமுறை சாத்தியமற்றது; மாற்றுவழிகள் அவசியம்: ரணில்

Post a Comment

Followers