தேசிய நல்லாட்சி அரசாங்கத்தினை யாராலும் கவிழ்க்க முடியாது. அரசாங்கத்தை கவிழ்க்கலாம் என்கிற நப்பாசையோடு சிலர் இன்னமும் இருக்கின்றார்கள். அவர்களின் ஆசைக்கு வாய்ப்பினை வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெள்ளவாய பொது மைதானத்தில் நேற்று திங்கட்கிழைமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மக்களின் ஆணைக்கேற்ப பதவியேற்ற இந்த அரசாங்கம், மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் உரிய காலகட்டத்திற்குள் நிறைவேற்றும்.
விவசாயத் துறைக்கு பிரகாசமான எதிர்காலம் ஒன்றை உருவாக்கித் தருவதற்கு எனது அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக விவசாயப் பொருளாதாரத் துறையை உறுதிப்படுத்தவும், தகுந்த அரச முகாமைத்துவத்தையும் உருவாக்கவும் உச்சபட்ச அளவில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாட்டில் நிலவிய வறட்சியை அடுத்து, இம்முறை பெரும்போக அறுவடைக் காலத்தின் இலக்கு நாற்பது சதவீதத்தால் குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அரசுக்கு எதிரான கருத்துடையவர்கள் கூட இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to தேசிய அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி