வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானவை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொய்யான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. குறுகிய அரசியல் நோக்கத்துடனே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து மக்களை திசைதிருப்ப பார்க்கின்றனர். இதில் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: பொன்சேகா