Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இறுதி மோதல்களின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை மாத்திரமின்றி, ஐக்கிய நாடுகளும், இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட இணைத்தலைமை நாடுகளும் பொறுப்புக்கூற வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இறுதி மோதல்களின் போது எமது உறவுகளை இராணுவத்திடம் கையளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை, அப்போது சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருந்த ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இணைத்தலைமை நாடுகளே ஏற்படுத்தியிருந்தன. இந்தியாவும் மறைமுகமாக தனதுஆதரவை வழங்கியிருந்தது.

ஆகவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் தொடர்பில் இந்தியா, ஐக்கிய நாடுகள் மற்றும் இணைத்தலைமை நாடுகளே பொறுப்புக் கூற வேண்டும். சர்வதேச நாடுகளை நம்பி எமது உறவுகளை ஒப்படைத்துவிட்டு, இன்றுவரை அவர்களை காணாமல் உறவினர்களாகிய நாம் தவித்து வருகின்றோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறையை இலங்கையில் ஏற்படுத்துவது அவசியம்.” என்றுள்ளார்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா.வும் இணைத்தலைமை நாடுகளும் பொறுப்புக்கூற வேண்டும்: அனந்தி சசிதரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.