ஆப்கானிஸ்தானுடனான நல்லுறவை வளர்க்குமுகமாக சமீபத்தில் மூடப்பட்ட அதனுடனான அனைத்து முக்கிய எல்லைகளையும் உடனடியாகத் திறக்குமாறு திங்கட்கிழமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார். ஆப்கான் குடிமக்கள் சுதந்திரமாக பாகிஸ்தானுக்குள் வந்து செல்வதற்கும், எல்லைகளுக்கூடாக நடைபெறும் முக்கிய வர்த்தகப் பணிகள் இடையூறு இன்றித் தொடரவும் என்றே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும் ஆப்கான் அரசு தம்முடனான பாகிஸ்தான் எல்லைகள் ஏன் மூடப்பட்டன என்ற காரணத்தை நினைவில் கொண்டு இனிமேல் தொழிற்படும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் நவாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் அண்மைக் காலமாக மிகத் தீவிரமாக இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து ஆப்கானில் மறைந்து இருந்து அத்தீவிரவாதிகள் பெறும் உதவிகளைத் தடுப்பதற்காக அந்நாட்டுடனான முக்கிய எல்லைகளை பாகிஸ்தான் மூடியிருந்தது. இந்நிலையில் இவ்விரு நாடுகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானும் ஆப்கானும் இணைந்து செயற்படும் என நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
சுமார் 2400 km நீளமான பாகிஸ்தான் ஆப்கான் எல்லையின் முக்கிய நுழைவாயில்கள் மூடப்பட்டதால் கடந்த மாதம் மட்டும் 50 000 பேர் ஆப்கானில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைய முடியாது அவதிப் பட்டனர். மேலும் இந்த எல்லைப் பகுதியினூடாக வருடாந்தம் இடம்பெறும் வர்த்தகம் $1.5 அல்லது $2 பில்லியன் டாலர் பெறுமதியானது ஆகும்.
இதேவேளை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சமீபத்தில் சிறுபான்மை இந்துக்களின் இந்துத் திருமண முறை மசோதா சட்டபூர்வமாகியுள்ளது. இதனால் அங்கு வாழும் இந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தானுடனான மூடப்பட்ட எல்லைகளை உடனடியாகத் திறக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு