Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், கூட்டமைப்பு நாளை சனிக்கிழமை வவுனியாவில் கூடி ஆராயவுள்ளது. சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனைவரும் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பிலான விடயத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே முரண்பாடுகள் எழுந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் முரண்கள் அதிகரிப்பு; கூட்டமைப்பு நாளை கூடி ஆராய்கிறது!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.