Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் காலில் விழுந்து கதறினர்.

28 நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை முதலமைச்சர் காலை 07.45 மணியளவில் சந்தித்தார். இதன்போது, போராட்டத்தில் ஈடுபடுவோரின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது, முதலமைச்சரின் முன் கண்ணீர் விட்டு கதறி அழுத உறவினர்கள், தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விடுதலைக்கு முயற்சி எடுக்க வேண்டும். தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, அவரின் காலில் விழுந்தும் கும்பிட்டும் கதறி அழுதுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர், “உங்களின் போராட்டம் நியாயமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில், நான் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன். விரைவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைக்குழு அறிக்கையையும் வெளிப்படுத்துமாறும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பேன்.”என்றுள்ளார்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு முதலமைச்சரின் காலில் விழுந்து உறவுகள் கதறல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...