Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நான் நலமாக இருக்கிறேன். என்னுடைய உடல்நிலை தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், தன்னுடைய உடல் நிலை தொடர்பில் வதந்திகள் பரப்பப்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒரு சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே மருத்துவமனை செல்ல வேண்டி ஏற்பட்டது. தற்போது நான் நலமாகவே இருக்கிறேன். ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வதந்திகளைப் பரப்பக் கூடாது.” என்றுள்ளார்.

0 Responses to நான் நலமாக இருக்கிறேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers