சுதந்திரத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்கு அழிவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று அனைத்துத் தரப்பிடமும் கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ சாலமுள்ள பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 396 வீடுகளை கொண்ட 'லக்சந்த செவன' வீடமைப்புத் தொகுதியின் இரண்டாம் கட்ட பணியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பொது மக்களிடம கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “தற்போது ஒருசிலர் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். சில ஊடகங்களும் பாதகமான விடயங்களை மாத்திரம் தெரிவித்து தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்கு அழிவுகளை ஏற்படுத்த வேண்டாமென நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். இவற்றின் பிரதிகூலங்களை அரசியல்வாதிகள் தனிப்பட்ட ரீதியில் பெற்றுக்கொள்வதில்லை. நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to சுதந்திரத்தின் எல்லைகள் கடந்து நாட்டுக்கு அழிவை ஏற்படுத்த வேண்டாம்: ஜனாதிபதி