Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்த காலத்தைக் காட்டிலும் நாட்டில் தற்போது மோசமான நிலை நீடிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் தற்போதைய அரசாங்கம் உள்நாட்டில் ஒரு கதையும் வெளிநாட்டில் வேறு ஒரு கதையும் ஐக்கிய நாடுகளிடம் இன்னொரு கதையையும் சொல்லி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு- கிழக்கில் பட்டதாரிகளின் போராட்டம், காணாமற்போனோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம், காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் என யுத்த காலத்தையும் விட மோசமான நிலையில் அரசாங்கமும் நாங்களும் உள்ளோம்.

இந்த அரசாங்கம் இங்கு ஒரு கதையும் வெளிநாட்டில் ஒரு கதையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு கதையும் செல்கின்றது. ஆனால் எந்த நாடும் ஒரு நாட்டுக்கு உதவி செய்வதாக இருந்தால் மனித உரிமை மேம்பட்டிருக்கவேண்டும். மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் சபை சாசனத்திற்கு கீழ் உள்ள நாடு அதன் முறைப்படி இயங்காத நிலையில் எவரும் எதையும் செய்யமாட்டார்கள்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் தெளிவாக சிலவற்றை கூறிவிட்டார். ஆகவே இந்த விடயத்தில் நாங்கள் எங்களைப்பற்றி சுயவிமர்சனம் செய்யவேண்டிய தேவையுள்ளது. இந் நிலையில் அரசாங்கம் இன்னும் இரண்டு வருடங்களை தனக்கு வழங்குமாறு கேட்கின்றது. அதற்குள் எல்லா பிரச்சனையையும் முடித்து விடுவோம் என்கின்றது.

இரண்டு வருடத்தை கொடுப்பதால் எதுவும் இல்லை ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் என்ன நடந்துள்ளது. ஆகவே ஐக்கிய நாடுகள் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று காலத்தை நீடிப்பது இன்னும் நிலைமையை சிக்கலாக்கும். அரசாங்கம் நிபந்தனைகளை செயற்படுத்தாவிட்டால் அதற்கான அழுத்தத்தை நாங்கள் கொடுக்கவேண்டும். அவ்வாறு அழுத்தத்தை கொடுக்காது நிபந்தனை அற்ற ஆதரவையே நாங்கள் கடந்த இரண்டு வருடமாக வழங்குகின்றோம்.

கடந்த வருடம் ஜெனீவாவில் கலப்பு விசாரணைக்கு சொன்று வந்து எதுவும் நடக்கவில்லை. நாங்கள் நிபந்தனையற்ற ஆதவை வழங்கிக்கொண்டு போகமுடியாது. அதேபோல் இன்னும் இரண்டு வருடம் வழங்கப்பட்டால் எல்லா விடயமும் மறக்கப்பட்டு விடும்.

எனவேதான் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கால நீடிப்பு வழங்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளோம். எனினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் இதற்கு மாறான நிலைப்பாட்டில் உள்ளனர். ஆதரவை வழங்குவதுதான் இராஜதந்திரமென்றால் அது தேவையில்லை.” என்றுள்ளார்.

0 Responses to யுத்த காலத்தை விடவும் மோசமான நிலை நீடிக்கிறது: சிவசக்தி ஆனந்தன்

Post a Comment

Followers