தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினைச் சிதறடித்து துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரின்போது போது, இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது. இந்த நடவடிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த நாட்டில் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தமது அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உரிமைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு பல்வேறு ஏமாற்றங்களும் ஆறாத வடுக்களும் இன்று வரையில் இருக்கின்றன.
தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில் இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தை வழங்குவதற்கு பிரித்தானியா முயலுகின்றது.
இந்தக் கால அவகாசமே வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்ற நிலையில் தற்போது வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், சட்ட வரைஞர்கள் ஆகியோர் நீதிக்கான விசாரணை பொறிமுறையில் பங்கேற்கத் தேவையில்லை என்பதை கால அவகாச தீர்மானத்தில் அல்லது அதற்கு மேலதிக தீர்மானமொன்றில் உட்புகுத்தி நிறைவேற்றுவதற்குரிய முயற்சிகளை அரசாங்கம் ஜெனீவாவில் மேற்கொண்டு வருகின்றது.
இதற்கு சில வல்லாதிக்க சக்திகளும், சிவில் அமைப்புகளும் துணைபோவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. அனைத்தையும் இழந்து நிற்கும் தமிழ்ச் சமுகம் சர்வதேசத்தையே தனது நீதிக்காக எதிர்பாத்திருக்கின்றது. அவ்வாறான நிலையில் தமது நலன்களுக்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைச் சிதறடித்து தமிழ் மக்களுக்குத் துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என இந்த உயரிய சபை ஊடாக கேட்டுக்கொள்கின்றேன்.”என்றுள்ளார்.

0 Responses to மேற்கு நாடுகள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது: சிவசக்தி ஆனந்தன்