இரோம் சர்மிளா, மணிப்பூரில் அமலில் இருந்த ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று 16 ஆண்டுகளாக நெடிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியவர்.
உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தபின்னர் தேர்தல் அரசியல் மூலம் அதிகாரத்தை வென்றெடுத்து மக்கள் பணியாற்றப்போவதாகக் கூறினார். மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல்
தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக இல்லை. வெறும் 90 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுத் தோல்வி அடைந்தார்.
தோல்வி காரணமாக விரக்தியடைந்த இரோம் சர்மிளா, தாம் அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யப்போவதாகச் சொல்லியவர், இப்போது கேரளமாநிலம் அட்டபாடியில் ஒரு பத்திரிகையாளர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சமூகப் போராளிகளை ஓய்வெடுக்க வைத்துவிட்டது இந்த சமூகம்.

0 Responses to சமூகப் போராளிகளை ஓய்வெடுக்க வைத்துவிட்டதா இந்தியச் சமூகம்?!