Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராம அபிவிருத்தித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்த மோதல்களினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் இக் கருத்திட்டத்தினூடாக தொழில்முயலுநர் நிலையை அடிப்படையாகக் கொண்ட கிராமியப் பொருளாதாரத் திட்டத்தின் மூலம், இப் பிரதேசங்களில் இன்னமும் பெற்றுக் கொள்ளப்படாமலிருக்கும் சமூக – பொருளாதார அபிவிருத்திக்கு வழிகோலுவதே இதன் நோக்கமாகும்.

முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தவிசாளராகக் கொண்டு செயற்படுகின்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் உள்ள 08 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலாளர்களினது ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் பின்பு கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட இந்த கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சரான ஜனாதிபதியினால் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சரவையினால் கடந்த கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்திக் கருத்திட்டம் மார்ச் மாத இறுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

விசேடமாக குடும்பங்களின் பிரதான குடியிருப்பாளராக உள்ள பெண்கள், விதவைகள் மற்றும் வேலையில்லாமல் ஒடுக்கப்பட்டுள்ள இளைய சமூகத்தினர் ஆகியோருக்கு தொழில்முயலுநர் நிலையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான வழிவகை அமைத்துக் கொடுக்கப்படும்.

0 Responses to வடக்கு - கிழக்கில் கைத்தொழில் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்தித் திட்டம்!

Post a Comment

Followers