Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம், இறுதியில் இலங்கையை சர்வதேச விசாரணையின் பக்கத்தில் கொண்டு சென்று நிறுத்தும் என்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 என்கிற முதலாவது தீர்மானத்தில் நிராகரிக்கபட்ட அனைத்தையும், இரண்டாம் கட்டத்தில் நிறைவேற்றவும் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக்கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு இந்த நகர்வை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த பயணம் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வதேச தரப்பு கொண்டுவந்த தீர்மானத்தை முன்னைய அரசாங்கம் எதிர்த்த நிலையில், இந்த அரசாங்கம் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தீர்மானத்துக்கு மீள் இணக்கம் தெரிவித்து முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரபாகரனை காப்பாற்ற முயற்சி செய்ய நபர்களே இன்று ஜெனீவா தீர்மானத்தினை கொண்டுவந்துள்ளனர். இதில் புலிகளை நியாயப்படுத்திய நபர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இறுதி யுத்தத்தில் பிரபாகரனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்த நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆகவே, தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் பிரதிநிதிகளும் எதை எதிர்பார்த்து செயற்படுகின்றனரோ அதை அடையும் பாதையை அரசாங்கம் தனது இணக்கத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது. ” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. வழங்கிய ‘கால அவகாசம்’ இறுதியில் இலங்கையை சர்வதேச விசாரணையில் நிறுத்தும்: தயான் ஜயதிலக

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...