ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் உரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ள அனைத்து விடயங்களும் கடும் நிபந்தனைகளோடு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.நா. தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு: சுமந்திரன்