Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மீத்தேன் இருக்கிறதா என்கிற ஆய்வுக்கு மட்டுமே சட்ட விதிமுறைகளுக்கு
உட்பட்டு அனுமதி அளித்தோம் என்று, திமுக செயல் தலைவரும், எதிக்கட்சித்
தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று கொட்டும் மழையிலும்,நெடுவாசல் மக்கள் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன்
திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்துக்கொண்டு
இருக்கிறார்கள்.இன்று இந்த போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு
உரை நிகழ்த்தினார்.அப்போது, மீத்தேன் ஆய்வுக்கு கை எழுத்து இட்டது
உண்மைதான் என்றும்.,இதில் பல்வேறு விதிமுறைகள் சட்டத் திட்டங்களுக்கு
உட்பட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார்.

அதாவது மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்,இயற்கை வளம் கெடக்கூடாது போன்ற
முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.இதுக் குறித்து அரசியல்
ஞானியான வைகோ அறிந்துக்கொள்ளாமல் என்மீதான பாசத்தால் தீட்டித்
தீர்க்கிறார் என்று கூறினார்.மேலும்,இதில் மக்களின் போராட்டத்தில்
பங்கெடுக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும்
அவசியம் திமுகவுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

0 Responses to மீத்தேன் ஆய்வுக்குத்தான் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி கொடுத்தோம்: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...