வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. திருப்பலியை யாழ் கத்தோலிக்க குருமார் நடத்தி வைத்தனர்.
நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆலயத்தின் பரிபாலகர் அன்டனி ஜெயராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டதோடு திருவிழா ஆரம்பமானது. இன்று காலை 06.00 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்றது. 06.30 மணிக்கு ஆயர் குருக்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் வரவேற்கப்பட்டனர். 06.45 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
காலையில் நிகழும் இந்த சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் திருவிழா நிறைவுக்கு வருவது வழமை.
வருடாந்தம் நடைபெறும் இந்த திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகைதரும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். எனினும், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மீனவர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையால், இம்முறை கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாக இந்திய (தமிழக) மீனவர்கள் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நிறைவு; இந்திய மீனவர்கள் புறக்கணிப்பு!