Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் சில நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் கப்டன் நிக்கலஸ் அந்தோனி, கொழும்பு ஊடகமொன்றிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் சோமாலியாவின் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் சோமாலியக் கடற்கொள்ளையர்களினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதனை மீட்க சோமாலியக் கடற்படையினர் கப்பலில் ஏறிச் சண்டையிட்டனர். எனினும், சோமாலியக் கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலியக் கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்பல் கப்படன் நிக்கலஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் சோமாலியக் கடற்படையினருக்கும், சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடற்கொள்ளையர்கள் கப்பலையும், எட்டு இலங்கை பணியாளர்களையும் விடுத்துள்ளனர்.

0 Responses to சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இலங்கையர்கள் விடுவிப்பு!

Post a Comment

Followers