Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய பதில் வழங்காமல், போராட்டத்தை மலினப்படுத்தும் வகையிலான உரைகளை நிகழ்த்துவதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களோடு விளையாட வேண்டாம். அவர்கள் சிந்திய கண்ணீரே முன்னைய அரசாங்கத்தை வீழ்த்தி, தற்போதையை அரசாங்கத்தினை அரியாசனத்தில் அமரச் செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய பதில் வழங்காமல் போராட்டத்தை மலினப்படுத்தும் வகையிலான உரைகளை நிகழ்த்துவதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறுத்திக்கொள்ள வேண்டும். இவர்கள் நினைத்தால் கடந்த ஆட்சியாளர்களை போன்று உங்கள் பதவியையும் அமரத்துவம் அடையச்செய்ய முடியும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் உறவினர்களும், வெயிலிலும் மழையிலும் வீதியோரங்களில் இருந்து தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரியும், இல்லையேல் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை பொறுப்புவாய்ந்த அரசிடமிருந்து நீதி கோரி நிற்பதும் தலைமை அமைச்சருக்கு கேலியாகவே தெரிகின்றது.

காணாமல் போனோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர் என்று திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மை என உலகம் நம்பும் என பிரதமர் நம்பிக்கொண்டிருக்கிறார். நம்பிய தமிழ் மக்களை ஏமாற்றியது போல் உலகத்தை துளி அளவேனும் ஏமாற்ற முடியாது. அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் யாரால், எப்போது, எங்கே கொல்லப்பட்டார்கள்?

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள் என்றால் அவர்களின் பெயர் விபரங்கள், எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற தகவல்களை ஆதாரத்தோடு முன்வைக்க வேண்டும்.

அப்படி ஆதாரத்துடன் நிரூபித்து, ஒருவரையேனும் கண்முன் நிறுத்தினால் அடுத்த நிமிடமே இம்மக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிடுவார்கள். பொறுப்பான ஒரு அரசு என்ற வகையில் பொறுப்புவாய்ந்த பதில்களை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க இந்த நல்லாட்சி அரசு முன்வரவேண்டும்.” என்றுள்ளது.

0 Responses to போராட்டக்காரர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் கருத்துரைப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும்: எஸ்.மயூரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.