Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித உரிமைகளில் ஒன்றான காணி உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் எந்தவொரு தரப்பும் பாகுபாடு காட்டக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

விவசாய நாடாக எமது நாட்டிலுள்ள காணிகளை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக சரியாகப் பயன்படுத்துவது அவசியமானதாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கு அது மிகவும் முக்கியமான காரணியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to காணி உரிமையில் பாகுபாடு காட்ட வேண்டாம்: ஜனாதிபதி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.