ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தெரிவித்துள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எப். தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், ஐக்கிய நாடுகள் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்காக வரைமுறையுடன் கூடிய கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு மறைமுகமாக உடன்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எப். மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போதே, காவ அவகாசம் வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொறுப்புக்கூறலுக்காக இலங்கைக்கு ஐ.நா. கால அவகாசம் வழங்குவதை ஏற்கவில்லை: ஈ.பி.ஆர்.எல்.எப்