Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இணைத் தலைவர்கள் பங்கேற்றாலும், இல்லாவிட்டாலும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை மாவட்டச் செயலாளர் மாதம் ஒருமுறை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளது.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இணைத் தலைவர்களாக மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர், அந்த மாவட்டம் உள்ளடக்கப்படுகின்ற மாகாணத்தின் முதலமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் மூவரையும் உள்ளடக்கியே இணைத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாவட்டச் செயலாளருக்கு முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நேரத்தைப் பெற்று கூட்டத்தினை ஒருங்கிணைப்பது இழுபறிகளில் நீடித்து வந்தது. இந்த நிலையிலேயே, இணைத் தலைவர்கள் பங்கெடுக்காவிட்டாலும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைக் கூட்ட ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளது.

0 Responses to இணைத் தலைவர்கள் பங்கேற்றாலும் இல்லாவிட்டாலும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்த ஜனாதிபதி செயலகம் பணிப்பு!

Post a Comment

Followers