Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2017 உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலை மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச அளிவில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 231 நகரங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் சிறந்த நகரங்கள் பட்டியலில், ஆஸ்திரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக முதலிடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜேர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் முதல் ஐந்து இடத்தில் அடுத்தடுத்து உள்ளன.

வாழ்வதற்கு மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் தேர்வாகியுள்ளது. லண்டன், பாரிஸ், டோக்கியோ, நியூயார்க் நகரங்கள் முதல் முப்பது இடங்களுக்குள் கூட வரவில்லை. பிராந்தியம் மூலம் சிறந்த நகரம் பட்டியலில் ஐரோப்ப பிராந்தியத்தில் வியன்னா முதலிடத்தில் உள்ளது.

பசிபிக்கில் ஆக்லாந்து முதலிடத்திலும், வட அமெரிக்காவில் வான்கூர், ஆசியாவில் சிங்கப்பூர், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் துபாய், தென் அமெரிக்காவில் Montevideo முதலிடத்தில் உள்ளன.சர்வதேச அளிவில் நகரம் உட்கட்டமைப்பு வசதிகளில் சிங்கப்பூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.

0 Responses to உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.