Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விவசாயிகள் போராட்டம் தொடர டெல்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் கடந்த 13 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களின் 14வது போராட்ட நாள்.அவர்களுடைய போராட்டம் தொடர டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் போலீசார் வாக்குறுதி அளித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், இழப்பீட்டுத் தொகை கூடுதலாக அறிவிக்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுவிதமான போராட்டங்களை செய்துவரும் இந்த விவசாயிகள், இன்று எலிக்கறி உண்ணும் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to விவசாயிகள் போராட்டம் தொடர டெல்லி போலீசார் அனுமதி

Post a Comment

Followers