ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடாது என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் மத்திய நிலையம் மற்றும் இலங்கை பத்திரிகை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 2006ஆம் ஆண்டு தயாரித்த தேசிய ஐக்கியத்திற்கான ஊடகப் பணி குறித்த 'வெலிகம பிரகடனம்' தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, சுதந்திரம் என்பன உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. தகவல் அறியும் உரிமை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுயாதீன ஊடக ஒழுக்கப்பாட்டு ஆணைக்குழுவுக்கான சட்டமூலம் 3 மாத காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்வதற்கான பொறுப்பு ஊடகங்களுக்கும் இருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடாது: கயந்த கருணாதிலக்க